ஒரு கோடி விதைப் பந்துகள் எனும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் விதைப்பந்து பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விதைப்பந்து தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூகநல ஆர்வலர் பூ.திருமாறன் ஒரு கோடி விதைப்பந்து திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் செட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் விதைப்பந்து தயாரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ரெ. பால் முருகன் தலைமை தாங்கினார். ஆசிரியை ச.சித்ரா முன்னிலை வகித்தார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் சிறப்புரை நிகழ்த்தினார். செட்டிகுளம் பகுதிகளில் கிடைக்கும் மர விதைகளை சேகரித்து, விதைப் பந்துகள் செய்து பூமியில் வீசுவதன் மூலம் மரங்களை அதிகரிக்கலாம் என திருமாறன் குழந்தைகளிடம் பேசினார். பள்ளி ஆசிரியைகள் ஜோஸ்பின் புளோரன்சியா, சாந்தகுமாரி, ஜெமிமா, சாந்தி சார்லெட், எஸ்தர் பியூலா, பிலிப் குமாரி, அனிதா, முத்துலட்சுமி, ஞா.லெஸ்லின், ஜெயந்தி, ஆர்த்தி, செல்வி மற்றும் அம்பை காந்தி தாசர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டிரஸ்ட், பெண் உலகம், கேப் இயர் இணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தன. இந்த வார இறுதியில் விதைப் பந்துகள் பெருமளவில் செய்பவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.