03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 2026 தேர்தலுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக தங்கமணி, வேலுமணியை நியமிக்க பாஜக திட்டம்- கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவர் தனியரசு மதுரையில் பேட்டி

2026 தேர்தலுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக தங்கமணி, வேலுமணியை நியமிக்க பாஜக திட்டம்- கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவர் தனியரசு மதுரையில் பேட்டி

எழுதியவர்: mohan March 8, 2026, 7:39 pm

தாய், தந்தை, மனைவி, குழந்தைகளை மதிக்க தெரியாத நடிகர் விஜய் – தமிழக முதல்வராக எப்படி வருவார் தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்

2026 தேர்தலுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக தங்கமணி, வேலுமணியை நியமிக்க பாஜக திட்டம் கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவர் தனியரசு மதுரையில் பேட்டி

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் பகுதியில் கட்சி நிர்வாகி இல்ல காதணி விழா நிகழ்ச்சியில் கொங்கு இளைஞர் பேரவை கட்சி தலைவர் தனியரசு கலந்து கொண்டார் சிறப்பாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தனியரசு பேசியதாவது:*

பெற்றோர், மனைவி, பெற்ற குழந்தைகளை மதிக்க தெரியாத நடிகர் விஜய் எப்படி தமிழக முதல்வராக அரியணை ஏற மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்

ஏற்கனவே கரூரில் 41 உயிர்கள் பலியான சம்பவத்திலிருந்து மீள முடியாத விஜய் இப்போது தனது மனைவிக்கும் துரோகம் விளைவித்து சங்கீதா மன உளைச்சலாகி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க போகிறார்.

நடிகை திரிஷா குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து கூறியபோது பல்வேறு விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

அதை நிரூபிக்கும் விதமாக திருமண விழாவிற்கு நடிகையை அழைத்து சென்ற நிகழ்வு அப்படித்தான் இருப்பேன் என விஜய் ஆணவமாக செயல்படுகிார் விஜய்.

வார்டு கவுன்சிலர் கூட ஆகாத நடிகர் விஜய் தமிழக முதல்வராக வருவேன் என்பது பகல் கனவு, நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள். அப்படியே வந்தாலும் பெண்களுக்கு திட்டங்களை தருவேன் என்பது பொய்யனது.

தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகள் கேட்டுள்ளோம் 1 தொகுதி உறுதியானது ஒரிரு நாட்களில் உறுதியாகி தலைவர்கள் முன் கையெழுத்தாகிடும் . எந்த தொகுதியில் நின்றாலும் தனியரசு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டசபை செல்வேன் அது உறுதி,

OPS திமுகவில் சேர்ந்ததின் காரணமாக தென் மாவட்டத்திலுள்ள தொகுதிகள் அதிகம் திமுக வசம் வரும் வெற்றி உறுதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தென்மாவட்டங்களில் வெற்றி பெறும்.

சின்னம்மா சசிகலா கட்சி ஆரம்பித்துள்ளது அதிமுகவுக்கு தான் இழப்பு அதிமுக ஒட்டு தான் குறையும் திமுகவுக்கு வாக்கு உயரும்

2026 தேர்தலுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கமாட்டார். வேலுமணி, தங்கமணி பொதுச்செயலாளராக பதவி வகிப்பது உறுதி பாஜக அதை செய்ய தயாராக உள்ளது.

மதுரை வந்த பிரதமர் மோடி NDA கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி தான் தமிழக முதல்வர் என கூறவில்லை பாஜக உறுதியாக அதிமுகவை அழித்து பாஜக வளரும் .

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் இல்லை மோடி, அமித்ஷா கண் அசைவில் தான் செயல்படுகிறார்

யாரையும் அரவணைத்து செல்லும் பண்பு அதிமுகவுக்கு இல்லை, இதனால் அதிமுக 2026 தேர்தலில் படுதோல்வி அடையும். தமிழக மக்கள் அதிமுகவை நிராகரிப்பார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!