தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தென்காசி மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்த மாணவர் ராஜா முஹைதீன், இந்திய குடிமைப் பணி தேர்வில் (UPSC) வெற்றி பெற்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். தென்காசி மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ராஜா முஹம்மது. இவரது தந்தை அப்துல் ரஹீம் ப்ரொபசராக உள்ளார். மாணவர் ராஜா, தமிழ்நாடு அரசின் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று இந்தியக் குடிமைப் பணிக்கு (UPSC) 7-வது இடத்தில் தேர்வாகி தென்காசி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சாதனை திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயன்பெற்று தமிழ்நாட்டில் 56 பேர் இந்தியக் குடிமைப் பணிக்கு (UPSC) தேர்வாகி உள்ளனர். அகில இந்திய அளவில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடத்தையும், அவரைத் தொடர்ந்து ராஜா முகைதீன் 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவ மாணவிகள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் உயரிய பொறுப்புகளுக்கு தேர்வாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகி உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் ராஜா முகைதீன் ஆகியோர் மென்மேலும் இன்னும் பல சாதனைகள் படைத்திட கீழை நியூஸ் செய்திக்குழுமம் வாழ்த்துகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.