17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..

கடலூரில் அண்ணா சிலை உடைப்பு – பரபரப்பு..

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2018, 6:31 pm
தமிழகத்தில் பெருந்தலைவர்களுக்கும் பஞ்சமில்லை, தலைவர்களின் சிலைகளுக்கும் பஞ்சமில்லை.  கடந்த கால வரலாற்றில் நாட்டுக்காக தன்னை அர்பணித்தவர்களுக்கும், தியாகம் செய்தவர்களுக்கும் பல முக்கிய பகுதிகளில் அவர்களை நினைவு கூறும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டது.  ஆனால் நாளடைவில் அதன் நோக்கம் மாறி எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சிலை வைக்கும் கலாச்சாரம் ஓங்கியது.
அதன் விளைவு சாதாரண தலைவர்களுக்கும், நாட்டுக்காக அர்ப்பணித்தவர்களுக்கும் வித்தியாசம் மறந்து போய், கட்சி தலைவர்களுக்கான சண்டையில், பெருந்தலைவர்களின் சிலைகளும் துண்டாக்கப்படுகிறது.  பின்னர் அவரவர் தலைவர்களின் சிலைகளை கூண்டுக்குள் வைத்து மரியாதை செலுத்தும் நிலை எட்டியது.
ஆனால் இன்று பாதுகாப்பு கூண்டையும் உடைத்து  கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டில் உள்ள அண்ணா சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.  இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  காவல்துறையினர் சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு அளித்ததுடன், சிலையை சேதப்படுத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!