03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புல் அறுக்க சென்ற கல்லூரி மாணவர் மீது மின்சாரம் தாக்கி பலி. உதவ வந்த பெரியப்பாவும் மின்சாரம் தாக்கி பலி.

புல் அறுக்க சென்ற கல்லூரி மாணவர் மீது மின்சாரம் தாக்கி பலி. உதவ வந்த பெரியப்பாவும் மின்சாரம் தாக்கி பலி.

எழுதியவர்: mohan March 6, 2026, 12:06 pm

மதுரை வாடிப்பட்டிஅருகே உள்ள T.நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் (20) மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் BE இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் தனது விவசாய தோட்டத்தில்

மாட்டுத்தீவன புல் அறுக்க சென்றபோது தோட்டத்திற்கு மேலே உள்ள உயரழுத்த மின்சார வயர் அறுந்து ஸ்ரீ கிருஷ்ணா மீது விழுந்ததில் அவர் துடிதுடித்து கொண்டிருந்தததை பார்த்த அவரது பெரியப்பா ஆதி நாராயணன் (55), அரசு பேருந்து ஒட்டுநராக வேலை பார்த்து வரும் இவரும் இவரது தம்பி சின்னதம்பி (79) என்பவரும் உடனடியாக. ஸ்ரீ கிருஷ்ணனை காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதில் மூவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதில் ஆதி நாராயணன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்,

படுகாயமடைந்த கல்லூரி மாணவர் ஶ்ரீ கிருஷ்ணன் சிசிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த சின்னதம்பி சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரது உடல்களும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி இருவர் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!