17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் முதலமைச்சரின் உருவ பொம்மையை எரித்த இருவர் மீது வழக்கு பதிவு

கீழக்கரையில் முதலமைச்சரின் உருவ பொம்மையை எரித்த இருவர் மீது வழக்கு பதிவு

எழுதியவர்: keelai February 11, 2017, 9:08 pm

தமிழக அரசியலில் தற்போது பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் அசாதாரண சூழலில் ‘தினம் ஒரு திருப்பம்’ என தமிழக மக்கள் திகைப்பில் ஆழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் கீழக்கரை நகர் அ.தி.மு.க மாணவர் அணி செயலாளர் சுரேஷ் மற்றும் அவர் கூட்டாளி குமார் ஆகியோர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்து பஜார் அருகே வள்ளல் சீதக்காதி சாலையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் உருவ பொம்மையை எரித்தனர்.

இது சம்பந்தமாக கீழக்கரை VAO தமிழ்செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!