05 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் தனி தொகுதியை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தலைமைக்கு கோரிக்கை

சோழவந்தான் தனி தொகுதியை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தலைமைக்கு கோரிக்கை

எழுதியவர்: mohan March 5, 2026, 9:40 pm

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கான குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு தலித் சட்டமன்ற உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியினர் கூறிவரும் நிலையில் இந்த முறை சோழவந்தான் தனி தொகுதியை காங்கிரஸ் கட்சியினர் திமுக தலைமையிடம் காங்கிரஸ் தலைமை கேட்டுப் பெற வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் மதுரை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு தலித் சட்டமன்ற உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் ஆகையால் இந்த முறை அந்தக் குறையை நிவர்த்தி செய்ய திமுக தலைமையிடம் சோழவந்தான் தனித் தொகுதியை கேட்டு பெற வேண்டும் என கோரிக்கை வலுவடைந்துள்ளது

மதுரை மாவட்டம் மேலூர் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 1952 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கக்கன் பக்தவச்சலம் காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணி காவல்துறை ஆதிதிராவிடர் நலத்துறை விவசாயத்துறை உள்ளிட்ட முக்கிய துறை அமைச்சராக தனித்துவத்துடன் செயல்பட்டு வந்தார் கடைசி காலம் வரை அரசு பேருந்தில் பயணம் செய்தும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மட்டுமே வந்த இவர் நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தார் அவ்வாறு திறம்பட செயல்பட்ட கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு தலித் எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை 1977 ஆம் ஆண்டு சமயநல்லூர் தனி தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்மேகம் அதிமுக வேட்பாளர் செல்வராஜிடம் தோல்வி அடைந்தார்

அதற்குப்பின் காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மதுரை மாவட்டத்தின் ஒரே தனி தொகுதியான சோழவந்தானை கேட்டு பெற வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் மாநில தலைமைக்கும் தேசிய தலைமைக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனுக்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர் இதுகுறித்து எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் பாண்டியன் கூறுகையில் கக்கனுக்கு பிறகு மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு தலித் எம் எல் ஏ கூட சட்டப்பேரவைக்கு அனுப்பப்படவில்லை தலித் சமூகத்தினருக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை மதுரையை சேர்ந்தவர் மேலூரை சேர்ந்தவர் என்று கக்கனின் பெருமைகளை சொல்கிறோமே தவிர அவரது சமூகத்தை சேர்ந்த ஒருவரை எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்க நிர்வாகிகளுக்கு மனம் இல்லை ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் 1962 ஆம் ஆண்டு சோழவந்தான் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பொன்னம்மாள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர்களுக்குப் பிறகு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு தலித் எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொன்னம்மாளின் பேத்தி ஜான்ஸிராணி நிலக்கோட்டை சோழவந்தானில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை காமராஜரின் ஆட்சி அமைப்போம் என்று கூறும் காங்கிரஸ் கட்சி கக்கன் வாழ்ந்த மண்ணில் இருந்து ஒரு தலித் சட்டப்பேரவை உறுப்பினரை கூட தேர்ந்தெடுக்க முடிய வில்லை என்பது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது

அது இந்த தேர்தலிலாவது நிறைவேற வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் திமுக தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் தனி தொகுதியை காங்கிரஸ் கட்சியினர் கேட்டு பெற வேண்டும் என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கோரிக்கை வலுவடைந்து உள்ளது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையும் தேசிய தலைமையும் இந்த முறை மதுரை மாவட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தலித்எம்எல்ஏ ஒருவரை தேர்ந்தெடுப்பார்களா என எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!