மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காடுப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழாபட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. காடுப்பட்டி கிளைச் செயலாளர் பால்பாண்டிதலைமை தாங்கினார்.
இந்த விழாவில் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் மற்றும் விருகை. தர்மர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் , ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன்,சோழவந்தான் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாண்டி , குபேந்திரன், கணபதி, வரதன், கார்த்தி, முருகன்,புதுப்பட்டி பிரபாகரன் , மற்றும் ஒன்றிய, கிளை மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




You must be logged in to post a comment.