17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழை நியூஸ் சார்பாக கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு மாணவர்களுக்கு இருக்கை வசதி….

கீழை நியூஸ் சார்பாக கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு மாணவர்களுக்கு இருக்கை வசதி….

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2018, 2:00 pm

திருப்புல்லானி ஒன்றியம் தில்லைனேந்தல் ஊராட்சி ஒன்றித்தில் இயங்கி வருகிறது கும்பிடுமதுரை தொடக்க பள்ளி.  இங்க 30கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.  இப்பள்ளி மாணவர்கள் பல நிகழ்வுகளில் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளும் வென்றுள்ளனர்.

ஆனால் இங்குள்ள மாணவர்களுக்கு முறையான இருக்கையும் மேசையும் இல்லாமல் தரையில் இருந்த வண்ணமே கடந்த வருடம் வரை படித்து வந்தனர்.  இம்மாணவர்களின் குறையை போக்கும் வண்ணம் கடந்த வருடம் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக 4 வட்ட பெரிய மேசைகளும் 27 சேர்களும் அப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இவ்வருடம் புதிய மாணவர்கள் வருகையை ஒட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக 10 சேர்கள் கூடுதலாக மாணவர்கள் நலன் கருதி வழங்கப்பட்டது.

கடந்த வருடம் அப்பள்ளியை பற்றி கீழை நியூசில் வெளிவந்த செய்தி கீழே உங்கள் பார்வைக்கு:- https://keelainews.in/2017/07/18/kumbidu-madurai-school-excellence/
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!