சங்கரன்கோவில் கொலை வழக்கின் குற்றவாளிகள் மேலும் மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான ஆட்கொண்டார் குளம் மாரியப்பன் என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (26), சங்கரன்கோவில் சங்கரநாராயணன் என்பவரின் மகன் சோலைவேல் (27), அவனிக் கோனேந்தல் பெரியசாமி என்பவரின் மகன் முருகேசன் (25) மற்றும் தளவாய்புரம் திருமலைசாமி என்பவரின் மகன் திருமலைக்குமார் (30) ஆகிய நான்கு பேர்கள், பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சங்கரன் கோவிலை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் உமா மகேஸ்வரன் (23), பரமசிவன் என்பவரின் மகன் உதய பிரகாஷ் @ உதயா (29) மற்றும் மாரியப்பன் என்பவரின் மகன் துளசிராஜன் (27) ஆகிய மூவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன் T.P.S., பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.