17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் அருகே நகரமங்களம் பகுதியில் வீரபத்திரசாமி ஆலய அஷ்டபந்ஷ்தன மஹாகும்பாபிஷேகம்.

இராமநாதபுரம் மாவட்டம் அருகே நகரமங்களம் பகுதியில் வீரபத்திரசாமி ஆலய அஷ்டபந்ஷ்தன மஹாகும்பாபிஷேகம்.

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2018, 11:48 pm
இராமநாதபுரம் மாவட்டம் நைனார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட நகரமங்களம் கிராமத்தில் அமைந்துள்ள வீரபத்திரசாமி மற்றும் இருளாயி அம்மன் ஆலயத்தில் கடந்த 21ஆம் தேதி மஹா கணபதி ஹோமம் அரசு வேம்பு திருமண கல்யாணத்துடன் விழா துவங்கியது.
அதனைத்தொடர்ந்து அனுக்கை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி முதல்கால யாகபூஜை, மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது, சூரியபூஜை, சோமகும்ப பூஜை, பாலிகா பூஜையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து விமாண மூலாலயா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  சர்வ சாதகம் ராஜாராம் பட்டர் கும்பத்தில் பூனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
இதில் நகர மங்களம், பனையூர், கமுதி, பாண்டியூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜி.காளீஸ்வரன், எஸ்.கர்ணன், ரவிச்சந்திரன்  மற்றும் நகர மங்களம் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!