நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் இந்திரா நகர் பகுதியில் நடைபெற்ற வ*ன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நெல்சன், கணேசன் ஆகியோரை நேரில் சந்தித்தும், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அவர்களின் குடும்பத்தார்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாளை A.M. பாருக் தலைமையில் ஆறுதல் கூறியதுடன் குடும்பத்தாரிடம் உதவிகள் தேவை எனில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர்.
நடைபெற்ற சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர்கள் குடும்பத்தினர் மீளாத நிலையில், அரசு இது விஷயத்தில் தீவிர கவனம் எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்தவும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் அலிஃப் A.பிலால் ராஜா, நெல்லை மாவட்ட அவை தலைவர் முருகேசன், இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், வழக்கறிஞர் பேரவை செயலாளர் முகமது நைனார் மற்றும் மனித உரிமைகள் அணி செயலாளர் அபு, நிர்வாகிகள் பஷீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.