தவெக கட்சி ஊர்வலத்தில் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் மோதி விபத்து ஏற்பட்டதாக பொய்யர்களால் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளது.
பரவும் செய்தி : தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜய்யை பின் தொடர்ந்த வாகனம் விபத்துக்குள்ளானதுக்கு காரணம் போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததே என்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன? : இது முற்றிலும் வதந்தி.
தஞ்சையில் தவெக கட்சி தலைவர் விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை பார்க்காமல், அதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், போலீஸ் வாகனம் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து நிகழ்ந்ததாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
வதந்தியைப் பரப்பாதீர் !




You must be logged in to post a comment.