17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி ஒன்றிய ஊராட்சி செயலாளர் சங்க கூட்டம்..

கடலாடி ஒன்றிய ஊராட்சி செயலாளர் சங்க கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2018, 6:08 pm

கடலாடி ஒன்றிய ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளின் செயலாளர் சங்கத்தின் மாதாந்திர குழுக்கூட்டம் டி.மாரியூர் இ-சேவை மையக் கட்டிடத்தில்  நடந்தது. இக்கூட்டத்தின் தொடக்கமாக  ஒன்றியத்தலைவர் ஆர்.முனீஸ்வரன் வரவேற்றார்.  அவரைத் தொடர்ந்து  மாவட்டத்தலைவர் கே.ரவி தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்  பொருளாளர் கே.திருமாறன், ஒன்றியப்பொருளாளர் அமுதா உட்பட 42 ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர். நிகழ்வின் நிறைவாக  மாரியூர் ஊராட்சி செயலாளர் ஜி.முத்துமுருகன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக பதிவறை எழுத்தருக்கு இணையாக ஊதியம் வழங்கிட கோரிக்கை உள்ளிட்ட இதர தீர்மானங்களை நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!