17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நாங்கள்தான் உண்மையில் நண்பர்கள்.. நெகிழ வைத்த அமீரக காவல்துறை…

நாங்கள்தான் உண்மையில் நண்பர்கள்.. நெகிழ வைத்த அமீரக காவல்துறை…

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2018, 1:51 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொர்ஃபகான் எனும் ஊரைச் சார்ந்த சிறுமி பெருநாளைக்கு தனக்கு பரிசு வேண்டும் என பேசியது பல சமூக வலைதளங்களிலும் வந்திருந்தது.  அதே போல் அச்சிறுமி கைபேசியில் ஏதோ மூன்று எண்களை அழுத்தியுள்ளாள், அவள் அழுத்தியது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ளது.  ஆனால் நிலைமையை புரிந்து கொண்ட காவல் துறையினர், பரிசு கூடையுடன் அச்சிறுமியின் வீட்டிற்கே சென்று அக்குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
இது சம்பந்தமாக அமீரக காவல்துறை உயர் அதிகாரி வலீத் கமீஸ் அல்யமாஹி கூறுகையில், இந்த வருடம் அமீரக தேச தந்தை ஜாயத் அவர்களின் வருடமாக கொண்டாடுகிறோம், அதன் நோக்கமே சந்தோசத்தை மக்கள் மத்தியில் பரப்புவதுதான் எங்கள் நோக்கம் என கூறி முடித்தார்.
Source:- KhaleejTimes..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!