02 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்

தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்

எழுதியவர்: mohan March 2, 2026, 9:49 pm

சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத சுவாமி மூல நாத சுவாமி திருக்கோவிலில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி சந்திரசேகர் அம்மன் பொற்றாமரை குளத்தில் எழுந்தருளி அஸ்திர தேவருக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மாபொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் அம்பாளுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டன. மாலை சுவாமி அம்பாள் நந்தி வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன, ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்திகை செல்வி தக்கார் மாலதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். சிறப்பு பூஜைகளை கண்ணன் என்ற பரசுராமன் செய்தார் அர்ச்சகர் செந்தில் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர் . தென்கரை முள்ளிப்பள்ளம் சோழவந்தான் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உபயதார் அய்யனார் அம்பலம் மகன் செல்வம் சாந்தி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!