மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளி பள்ளம் ஊராட்சி கழகத்தில் உள்ள திமுக அலுவலகம் சட்டமன்ற தேர்தல் 2026-யை எதிர்கொள்ளும் வகையில் வர்ணம் பூசப்பட்டு புது பொலிவுடன் சீரமைக்கப்படுகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைத்து சிறிய ஓட்டு கட்டிடமாக செயல்பட்டு வந்த முள்ளிப் பள்ளம் ஊராட்சி திமுக அலுவலகம் தற்போதைய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியின் ஆலோசனையின் பேரில் ஊராட்சி கழக செயலாளர் முள்ளிப்பள்ளம் கேபிள் ராஜா அவர்களின் முயற்சியில் 2009 ஆம் ஆண்டு கான்கிரீட் கட்டிடமாக உருமாற்றம் பெற்றது .தொடர்ந்து பல்வேறு உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்களில் முக்கிய பங்கு வகித்த இடமாகும். ஒருங்கிணைந்த வாடிப்பட்டி ஒன்றியத்தில் திமுகவுக்கு தொடங்கப்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் முக்கியமானது. இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026 எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் கழகப் பணிகளை மேற்கொள்ள முள்ளி பள்ளம் ஊராட்சி கழகச் செயலாளர் கேபிள் ராஜா ஏற்பாட்டின் பேரில் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசும்பணி நடைபெற்று வருகிறது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முள்ளிப்பள்ளம் ஊராட்சி திமுக அலுவலகத்திலிருந்து செயல்படுத்த வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் ஆயத்தமாகி வருகிறது இதனால் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் முள்ளிப்பள்ளம் திமுக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிக்காக புது பொலிவுடன் தயாராகி வரும் ஊராட்சி திமுக அலுவலகம்
எழுதியவர்: mohan March 1, 2026, 11:34 am




You must be logged in to post a comment.