உண்ண நேரத்திற்கு உணவில்லை…
ஆனால் தினம் ஒரு அமைச்சருடன் சந்திப்பு..
உறங்க இடமில்லை..
உழைப்புகேற்ற ஊதியம் இல்லை..
உழைப்புகேற்ற ஓய்வில்லை..
வாழ்க்கையில் நிம்மதியில்லை..
எங்களுக்காக பேச ஆளுமை இருந்தும், இயலவில்லை..
எதிர்த்து கேட்க துணிவும் இருந்தும்.. கேட்க முடியவில்லை..
ஆதரவாக அரவணைக்க அருகில் உறவுகள் இருந்தும்.. காண இயலவில்லை..
பண்டிகைகள் அனைத்தும் வரும்.. ஆனால் எங்களுக்கு பாதி பண்டிகை சாலைகளில்..
வாழ்வும் இல்லை சாவும் இல்லை.. முழுவதும் போராட்டமே..
எண்ணிலடங்கா பிரச்சனையுடன் அரசு சபைக்கு சென்று தீராவிட்டாலும்.. எவ்வித சலனமும் எதிர்ப்பும் இன்றி செய்தி வர வேண்டும்….
பத்திரிக்கையாளனுக்கு காவல்துறை பணியும் இனிதாக தெரியும், காரணம் அது அரசாங்க பணி.. கிடைக்கும் சில அரசாங்க சலுகைகள்…
மொத்தத்தில் ஆயிரம் கணவுகளோடு கால்பதித்த பத்திரிக்கையாளர் துறை ஏனோ நிஜமாக மறுக்கிறது..
ஜனநாயகத்தின் நான்காம் தூணை நம்பி சென்னை இறங்கியவனுக்கு..வாழ்கை எனும் தூண் திண்டாட்டம்தான்..
தலைநகரில் கனவோடு வந்து இறங்கியவனுக்கு குழந்தையின் முகம் பார்க்க மூன்று வருடங்கள் ஆனது..
சாதிக்க வந்தவனுக்கு சம்பளம் போதவில்லை, கேட்டால் வேறு வேலை பார் என்ற இலவச அறிவுரை..
அதையும் தாண்டி சம்பாதிக்க எத்தனித்தால.. ஒழுக்கச்சீலனா என்ற ஏளன பட்டம் ..
சமூகத்துக்காக ஓடி உழைக்கும் என்னை ஏளனமாக பார்க்கும் சமுதாயமே…
ஒரு நாள் பத்திரிக்கையாளனாக இவ்வுலகத்தில் பயணித்து பார்க்க எத்தணித்து பார்…
நள்ளிரவு 12 மணிக்கு நல்லதானாலும், துர்சம்பவமானாலும் கண்விழித்து கண்காணிப்பவன் பத்திரிக்கையாளன் தான்…
மக்கள் பிரச்சனையை கொண்டு செல்பவனும், அரச செய்தியை கொண்டு வருபவனும் பத்திரிக்கையாளன்தான்..
ஆக கொலைகளத்தில் செய்தி சேகரிக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் ஒவ்வொரு தலைமுறையின் அடையாளம்….





You must be logged in to post a comment.