17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » SDPI கட்சியின் 10ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கொடியேற்றம்..

SDPI கட்சியின் 10ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கொடியேற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2018, 5:30 pm
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை  நகர் சார்பில் நகர் தலைவர். கீழை அஸ்ரப் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது.  இக்கட்சியின் பொருளாளர் ஜகுபர் சாதிக்  வரவேற்புரை வழங்கினார்.
அதை தொடர்ந்து லெப்பை டீ கடை முஸ்லீம் பஜார் அருகில் SDPI கட்சியின் கொடிக்கம்பத்தில் தொகுதி துணை தலைவர் அபுபக்கர் சித்திக்  அவர்கள் கொடியேற்றி சிறிது உரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக சவூதி இந்தியன் சோசியல் போராம் அல் ஹோபார் கிழக்கு மாகாண தலைவர் ரமீஸ்தீன் கலந்து கொண்டார்.  நிகழ்வின் இறுதியாக கிழக்கு கிளை தலைவர் பஹ்ருதீன் நன்றியரை நிகழ்த்தினார்.
அதே போல் கீழக்கரை  நகர் காஞ்சீரங்குடி கிளை சார்பில் கிளை துணை  தலைவர்.அமீர் மற்றும் செயலாளர் சிம்மீஸ் கான் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக சவூதி இந்தியன் சோசியல் போராம் அல் ஹோபார் கிழக்கு மாகாண தலைவர் ரமீஸ்தீன் பள்ளி அருகில் கொடியேற்றினார். இறுதியாக  கிளை துணை தலைவர் அமீர்  நன்றியரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு SDPI கட்சி சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டது.
 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!