17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் – அமைச்சர் மணிகண்டன் கோரிக்கை மனு..

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் – அமைச்சர் மணிகண்டன் கோரிக்கை மனு..

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2018, 3:57 pm
இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக மாவட்டத்திற்கான விமான நிலையம் உள்ளது.  இந்த குறையை போக்கும் எண்ணத்தில்  இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு புதிய விமான நிலையம் வேண்டி தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன்  மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். இதுவரை எந்த அமைச்சரும் எடுக்காத முயற்சியை அமைச்சர் மணிகண்டன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உடனிருந்தார்.
இதற்கான கோரிக்கை மனுவை மத்திய தொழில், வணிகம் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர்  ஸ்ரீ.சுரேஷ் பிரபு ஜியை  நேரில் சந்தித்து  கோரிக்கை கடிதம் வழங்கினார். இந்த கோரிக்கை மனு ஏற்கப்படும் பட்சத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தொழில் ரீதியாக பல முன்னேற்றம் ஏற்படும்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!