சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவில் வருகின்ற ஆறாம் தேதி நடைபெறும் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது..
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் சுயம்புவாக அமைந்துள்ள விசாக நட்சத்திரத்தின் ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவில் சனி பெயர்ச்சி விழா வருகின்ற 6ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி கோவில் முன்பு நடைபெற்றது இன்று காலை 7 மணி அளவில் முகூர்த்தக்கால் கம்பத்திற்கு பால் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது
கோவில் அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் பூஜைகள் செய்தார் செயல் அலுவலர் இளமதி தலைமையில் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா உள்ளிட்டோர் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
சனி பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களுக்கும் ஸ்ரீ சனீஸ்வரர் சாந்தி ஹோமமும் ஸ்ரீ சனீஸ்வர ப்ரித்தி ஹோமமும் அவரவர் நட்சத்திரங்களுக்கு 9 வகையான சமித்து வகைகளாலும் மற்றும் 108 வகை மூலிகைகளை நெய்யுடன் சேர்த்து யாகங்கள் நடைபெறும் மற்றும் அவரவருடைய பெயர் ராசிக்கு விசேஷ சிறப்பு வேள்விகளும் நடைபெற உள்ளது
சோழவந்தானில் மிகவும் பிரசித்தி பெற்றதும் மிகவும் பழமை வாய்ந்ததுமான சனீஸ்வர பகவான் கோவிலின் சனிப்பெயர்ச்சி விழா வருகின்ற 6ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மதுரை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் சனி பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது




You must be logged in to post a comment.