5000 ரூபாய் வாங்கிய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி..! என தலைப்பிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டூ மதுரை அரசு பேருந்து கட்டணம் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக பொய்யான வதந்தி சமூக வலை தளங்களில் பொய்யர்களால் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளது.
பரவிய செய்தி : ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத் தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன? : இது குளிர்சாதன பேருந்து, சாதாரண பேருந்தே 75 ரூபாய்.
‘அரசுப் போக்குவரத்துக் கழகம் இராஜபாளையம் கிளை மூலம் தடம் எண் 940A தடப்பேருந்து இராஜபாளையம் திருச்சி வழித் தடத்தில் குளிர்சாதன பேருந்து இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. அப்பேருந்திற்கு திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு G.O Ms 48 நாள் 28.01.2018-ன் படி குளிர்சாதன பேருந்திற்குரிய பயணக் கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயணக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட வில்லை. சாதாரண பேருந்தில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்த கட்டண உயர்வும் செய்யப்படவில்லை’ என்று மதுரை போக்குவரத்துக் கழக (விருதுநகர் மண்டலம்) உதவி மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
வதந்தி பரப்பாதீர்!




You must be logged in to post a comment.