அரசு கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் விடுதிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan February 27, 2026, 12:47 pm

தமிழகத்தில் கள்ளர் சீரமைப்பு துறை மதுரையை மையமாக கொண்டு தேனி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டம் இந்த மூன்று மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு துறை சிறப்பாக செயல்பட்டு வந்தது. கள்ளர் சீரமைப்புத் துறையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு தனியாருக்கு தாரை வாக்கும் நோக்கத்தோடு செயல்படுவதை கண்டித்தும் ,அரசு கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் விடுதிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்தும் தமிழ் மாநில பிர மலைக் கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மாநில இணைச் செயலாளர் சௌந்தரபாண்டியன் மாநில அமைப்பு செயலாளர் கணேசன் சேடபட்டி ஒன்றிய செயலாளர் தெய்வம் மாணவர் அணி தினேஷ், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன



You must be logged in to post a comment.