18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளையின்க 15 வது ஆண்டு விழா..

கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளையின்க 15 வது ஆண்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் June 20, 2018, 1:35 pm

கீழக்கரையில் 19/06/2018 அன்று கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளையின் 15 வது ஆண்டு விழா மற்றும் தேவையுடையோருக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவும் மாலை 06.00 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழா  மேலத்தெரு அரூசியா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தலைவர்  உமர் அனைவரையும் வரவேற்றார. மேலும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, இராமநாதபுரம் மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவலர் தங்க வேலன், கீழக்கரை பாரத வங்கி மேலாளர் மாணிக்கம், இஸ்லாமியா பள்ளி தாளாளர் M.M.K. முகைதீன் இப்றாகீம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சாலிஹ் ஹுசைன்,   மக்கள் நல பாதுகாப்பு கழக நிர்வாகி  முகைதீன் இபுறாகீம்,  பேங்க் அப்துல் காதர், அப்ரோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை முன்னாள் தமுமுக நிர்வாகி சிராஜுதீன் தொகுத்து வழங்கினார்.  இந்நிகழ்வில்  300கு மேற்பட்ட மாணவச் செல்வங்கள் பயனடைந்தனர்.
 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!