*உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் – 5 ஆண்டுகளாக உசிலம்பட்டி தொகுதிக்கு எதையும் செய்யாத திமுக அரசை எம்எல்ஏ அய்யப்பன், பாராட்டி பேசியதாக குற்றம்சாட்டி அவருக்கும் கண்டனம் தெரிவித்து விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,*
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு நகராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய்களை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், பேருந்து நிலைய விரிவாக்க பணி மற்றும் சந்தை கடைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதன் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், விரைவில் சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரியும், பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை முறைப்படுத்த கோரி கண்டன கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.,
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நகராட்சி நிர்வாகத்தை திமுக அரசு கையில் வைத்திருந்தாலும், அதிமுகவும் கைகோர்த்து டெண்டர் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும்., எம்எல்ஏ அய்யப்பன் கூட அவர் அலுவலகத்திற்கு சென்று வரும் பகுதியில் சாக்கடை முறையாக இல்லாத நிலையில் இருந்தாலும், ஐந்து ஆண்டுகளாக உசிலம்பட்டி தொகுதிக்கு எதையும் செய்யாத திமுக அரசை வாழ்த்தி பேசியது அவமானமாக இருப்பதாகவும்., உசிலம்பட்டி தொகுதியில் திமுக டெபாசிட் இழக்க வைக்க ஒவ்வொரு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.,




You must be logged in to post a comment.