26 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு முதல்வரிடம் தங்கப்பதக்கம் பெற்ற தென்காசி கலெக்டர் கமல் கிஷோர்..

தமிழ்நாடு முதல்வரிடம் தங்கப்பதக்கம் பெற்ற தென்காசி கலெக்டர் கமல் கிஷோர்..

எழுதியவர்: Abubakker Sithik February 26, 2026, 1:59 pm

தமிழ்நாடு முதலமைச்சரின் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றிய தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முதல் பரிசுக்கான தங்கப்பதக்கம் (ம) ரூ.1,00,000 க்கான காசோலையை முதலமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (26.02.2026) நடைபெற்ற அரசு விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினம் பிப்ரவரி-24 குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றியதற்காக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோருக்கு முதல் பரிசுக்கான குழந்தை பாதுகாப்பு தின விருது மற்றும் ரூ.1,00,000 க்கான காசோலையினை வழங்கினார்.

மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த முதல் மூன்று மாவட்டங்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்கு சிறப்பாக செயலாற்றியதற்காக தென்காசி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதல் பரிசுக்கான குழந்தை பாதுகாப்பு தின விருது மற்றும் ரூ.1,00,000 க்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோருக்கு வழங்கினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!