திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகப்பகுதியில், பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை தொடர்பாக வி.கே.புரம் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் சில தவறான தகவல்கள் பரவி வருகிறது என நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

24.02.2026 அன்று வி.கே.புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் டானா பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, பள்ளி அருகே சிலர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்ததன் பெயரில், காவல் துறையினர் அங்கு சென்றபோது, காவல் துறையினரை கண்டதும் இரு நபர்கள் மற்றும் சில மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அதில் டானா பகுதியை சேர்ந்த ஸ்ரீராமகிருஷ்ணன் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, 35 கிராம் தடை செய்யப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் சந்தோஷ் (21) மற்றும் நம்பிராஜன் (22) ஆகியோர் 25.02.2026 அன்று கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு எதிராக NDPS சட்டம் மற்றும் JJ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகம் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்ட சட்டப்படியான நடவடிக்கையினை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானதும் ஆதாரமற்றதும் ஆகும். இவ்வாறு நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.