25 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

எழுதியவர்: mohan February 25, 2026, 3:48 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர் பேட்டை கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் பால்குடம் ஊர்வலம் வந்தது வழிநெடுக பக்தர்கள் பொதுமக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் தொடர்ந்து வீரமாகாளி அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக வீரமாகாளி அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் மா பொடி திரவிய பொடி பன்னீர் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக குழு மற்றும் பேட்டை கிராமத்தினர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!