25 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » செய்திகள் » மாணவர்களின் பயன்பாட்டிற்கு கால்குலேட்டர்கள் வழங்கிய பேராசிரியர்

மாணவர்களின் பயன்பாட்டிற்கு கால்குலேட்டர்கள் வழங்கிய பேராசிரியர்

எழுதியவர்: mohan February 25, 2026, 3:38 pm

மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசனுக்கு பொருளியல் பாடம் கற்பித்த உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியின் பொருளியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் இப்பள்ளி மேல்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வணிகவியல் பாடப் பிரிவு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கு பயன்படுத்தும் விதமாக 16 கால்குலேட்டர்கள் நினைவு பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார். பொறுப்பு தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் மாணவர்களை வாழ்த்தி கால்குலேட்டர்கள் வழங்கினார்.

மாணவர் அழகேசன் பேசும்பொழுது எங்கள் ஆசிரியர் முருகேசனின் பேராசிரியர் சுரேஷ் கால்குலேட்டர்கள் வழங்கியது எங்கள் கல்விக்கு ஊக்கம் அளித்துள்ளது. நாங்களும் பொறுப்புடன் கல்வி கற்று சமூக வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் சாதித்து இவர்களைப் போன்று முன்மாதிரியாக வருவோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் போஸ், மணிக்குமார், செந்தில்குமார், வீரவேல், முருகேசன், ஜீவரத்தினம், விஜய பிரியா, சுரேஷ்குமார், பாலாமணி மாணவர்களை வாழ்த்தினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!