17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » எக்குடியில் முஸ்லிம் வாலிபர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா..

எக்குடியில் முஸ்லிம் வாலிபர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் June 18, 2018, 10:51 pm

எக்குடியில் 16 .6.2018 அன்று முஸ்லிம் வாலிபர் சங்கம் திறப்பு விழா சிறப்பாக  நடைபெற்றது. இவ்விழாவிற்கு  ஜமாத் தலைவர்  அப்துல் காதர் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியை  கிராஅத் ஓதி தலைமை இமாம் சரீத் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியின் வரேவேற்புரையை ஜமாத் செயலாளர் அஸ்கர் அலி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஜமாத் துணை தலைவர் ஹாஜா முஹைதீன்  மற்றும் பொருளாளர் குலாம் முஹம்மது முன்னிலை வகித்தார்.  மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக  தொழில் அதிபர் அசன் அலியார்  மற்றும் ஹாஜா நஜ்முதீன்  கலந்து கொண்டார்கள்.  மேலும் சிராஜுதீன்,   இஸ்ஸதீன்,  கமல்ராஜ்,  நூர்முகம்மது ஆகியோர்  சிறப்புறை ஆற்றினார்கள்.

இறுதியாக இந்நிகழ்ச்சி இமாம் ரியாஸ் துஆவுடனும், சங்கத் தலைவர் காசிம் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் மற்றும் வாலிபர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!