நிலக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
நிலக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா திருவுறுவப்படத்திற்கு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழாவிற்கு, நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் உதயக்குமார் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை பேரூர் அதிமுக செயலாளர் சேகர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து நான்கு ரோடு பகுதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா திருவுறுவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வரும் சட்டபேரவை தேர்தலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் பேரூர் அதிமுக செயலாளர் தண்டபாணி மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.