17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » AMD டிஷைன் ஸ்டூடியோ & கன்ஸ்ட்ரக்ஷன் – கீழக்கரையில் கட்டிட வடிவமைப்புக்கென பிரத்யேக நிறுவனம் துவக்க விழா நிகழ்ச்சி

AMD டிஷைன் ஸ்டூடியோ & கன்ஸ்ட்ரக்ஷன் – கீழக்கரையில் கட்டிட வடிவமைப்புக்கென பிரத்யேக நிறுவனம் துவக்க விழா நிகழ்ச்சி

எழுதியவர்: keelai June 18, 2018, 1:36 pm

கீழக்கரை நெய்னா முஹம்மது தண்டையல் தெருவை சேர்ந்த ஆர்கிடெக்ட் செய்யது சித்தீக் ரிஸ்வான் வள்ளல் சீதக்காதி சாலை லெப்பை தெரு சந்திப்பில் AMD டிஷைன் ஸ்டூடியோ & கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற பெயரில் கட்டிட வடிவமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனத்தை நேற்று துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கீழக்கரை நகரின் கட்டிட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இது குறித்து AMD டிஷைன் ஸ்டூடியோ கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி ஆர்கிடெக்ட் செய்யது சித்தீக் ரிஸ்வான் அவர்கள் கூறுகையில் ”இறைவனுடைய அருளால் கீழக்கரையில் கட்டிட வடிவமைப்புக்கென பிரத்யேக நிறுவனமாக கீழக்கரை நகரின் மண்ணின் மைந்தர்களான சிறந்த கட்டிட வடிவமைப்பாளர்களை, பொறியாளர்களை ஒருங்கிணைத்து எங்கள் நிறுவனத்தை துவங்கியுள்ளோம்.

எங்கள் நிறுவனத்தில் கட்டுமானப் பணிகள் சம்பந்தமான அனைத்து சேவைகளும் அழகிய முறையில் சிறப்பாக செய்து தரப்படும். வாடிக்கையாளர்களின் மேலான மன நிறைவும், வாழ்த்துக்களும் மட்டுமே எங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு முதல் படியாக கருதுகிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

AMD டிஷைன் ஸ்டூடியோ & கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தொழில் சிறக்க கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!