17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நோன்பு பெருநாளை முன்னிட்டு வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் நடத்திய ஆண்டு விழா.

நோன்பு பெருநாளை முன்னிட்டு வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் நடத்திய ஆண்டு விழா.

எழுதியவர்: ஆசிரியர் June 17, 2018, 11:38 pm
இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டில் நோன்பு பெருநாளை முன்னிட்டு வருடந்தோறும் மதரஸா மாணவ மாணவியர்களுக்கு ஆண்டு விழா  நடத்துவது வழக்கம், அதே போல் இந்த வருடமும்  லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் அல் மதரஷத்துல் தீனியா அரபி மதரஸா மாணவ மாணவியர்களின் 9 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று (16.06.2018)சிறப்பாக நடைபெற்றது.
இதன தொடர்ச்சியாக  மதியம் 2மணி அளவில் விளையாட்டு போட்டியும், அதனை தொடர்ந்து மாலை 7மணி அளவில் நடைபெற்ற ஆண்டு விழாவில் இஸ்லாமிய மார்க்க கல்வி குறித்த மதரஸா மாணவ மாணவியர்களின் பேச்சு போட்டி, கேள்வி பதில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில் வண்ணாங்குண்டு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!