23 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மற்றும் சரி பார்ப்பது எப்படி.?

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மற்றும் சரி பார்ப்பது எப்படி.?

எழுதியவர்: Askar February 23, 2026, 3:46 pm

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும் பெண் வாக்காளர்கள் – 2,89,60,838 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போதும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்பது?

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5,67,07,380 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

உங்களின் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வது எப்படி?

இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ பக்கமான https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

1. அடையாள அட்டை எண் மூலம் தேடுதல்!

உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் மற்றும் மாநிலத்தை பதிவிட்டு பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்க்க முடியும்.

2. தகவல்கள் மூலம் தேடுதல்!

புதிய வாக்காளராக இருந்தால் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவராக இருந்தால், தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தகவல்களை பதிவிட்டு பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்க்கலாம்.

மாநிலம், பெயர், உறவினர் பெயர், பிறந்த தேதி அல்லது வயது, பாலினம் ஆகியவற்றை சரியாக பதிவு செய்தால், உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியும்.

3. தொலைப்பேசி எண் மூலம் தேடுதல்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள உங்களின் தொலைப்பேசி எண்ணை பதிவிட்டு, அந்த எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கலாம்.

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் கீழே தகவல்கள் கிடைக்கும். உங்கள் விவரங்களை விரிவாக பார்ப்பதற்கு ’வியூ டீடைல்ஸ்’ (view details) என்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!