இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 209. பரமக்குடி (தனி), 210. திருவாடானை, 211. இராமநாதபுரம் மற்றும் 212. முதுகுளத்தூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23.02.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. 23.02.2026 நிலவரப்படி இறுதி வாக்காளர் பட்டியல் சட்டமன்ற தொகுதி 209. பரமக்குடி (தனி) தொகுதியில் ஆண் வாக்காளர் 1,15,701 பெண் வாக்காளர் 1,17,714 மூன்றாம் பாலினம் வாக்காளர் 18 மொத்தம் 2,33,433 வாக்காளர்களும் 210. திருவாடானை தொகுதியில் ஆண் வாக்காளர் 1,40,103 பெண் வாக்காளர் 1,41,997 மூன்றாம் பாலினம் வாக்காளர் 21 மொத்தம் 2,82,121 வாக்காளர்களும் 211. இராமநாதபுரம் தொகுதியில் ஆண் வாக்காளர் 1,52,412 பெண் வாக்காளர் 1,57,740 மூன்றாம் பாலினம் வாக்காளர் 13 மொத்தம் 3,10,165 வாக்காளர்களும் 212. முதுகுளத்தூர் தொகுதியில் ஆண் வாக்காளர் 1,48,105 பெண் வாக்காளர் 1,49,202 மூன்றாம் பாலினம் வாக்காளர் 03 மொத்தம் 2,97,310 வாக்காளர்களும் உள்ளனர். இதில் நான்கு தொகுதிகளில் மொத்த ஆண் வாக்காளர்கள் 5,56,321 பெண் வாக்காளர்கள் 5,66,653 மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் 55 உட்பட மொத்தம் 11,23,029 வாக்காளர்கள் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் மற்றும் வாக்குச் சாவடி நியமிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் https://www.elections.tn.gov.in� மற்றும் https://voters.eci.gov.in� இணையதளங்களில் தங்களது பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.