23 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் ஓவியப்போட்டி; பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு..

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் ஓவியப்போட்டி; பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு..

எழுதியவர்: Abubakker Sithik February 23, 2026, 8:52 am

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் 39-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ. மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் மாதிரிகள் என்ற தலைப்பிலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருங்கால அறிவியல் மையம் என்ற தலைப்பிலும், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓவியங்கள் வரைந்தனர். மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் மேற்பார்வையில், கல்வி அலுவலர் மாரி லெனின் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு வருகிற 27-ஆம் தேதி நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!