23 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » கடைநல்லூர் பகுதியில் கண்ணாடி வீரியன் விஷபாம்பு பிடிபட்டது..

கடைநல்லூர் பகுதியில் கண்ணாடி வீரியன் விஷபாம்பு பிடிபட்டது..

எழுதியவர்: Abubakker Sithik February 23, 2026, 12:37 am

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டை தெரு குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் முன்பு கொடிய விஷப் பாம்புகளில் ஒன்றான கண்ணாடி வீரியன் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு விரைந்து சென்ற திமுக நகர செயலாளர் இத்தாலியன் பீரப்பா தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்களால் கண்ணாடி வீரியன் விஷபாம்பு பிடிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட கடையநல்லூர் தமிழ்நாடு தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நகர திமுக செயலாளர் இத்தாலியன் பீரப்பா ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!