தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் மக்காச்சோளம் பயிர் அறுவடை நிறைவடைந்த நிலையில், குறைந்த விலை வைத்து மக்காச்சோளம் வாங்கப்படுவதால் விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். விவசாயிகள் சந்தித்து வரும் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமோழியிடம் அளித்த கோரிக்கை மனுவில், மக்காச்சோளம் இரண்டு மாதங்களுக்கு முன்பு விலை 2400 என்ற நிலையில் இருந்தது. தற்போது அறுவடை முடிவடைந்த நிலையில் விவசாயிகளிடம் விலையை தலைகீழாக குறைத்து வியாபார தந்திரங்களோடு 1600 என்ற நிலையில் மிகவும் அடிமாட்டு விலையில் விலை வைத்து வாங்கி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகப்பெரும் பொருளாதார நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
எனவே மக்காச்சோள விவசாயிகள் சந்திக்கும் விலை சரிவு பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த பிரச்சினைக்க தீர்வு காண்பதாக கனிமொழி எம்.பி உறுதி அளித்தார். இந்த சந்திப்பில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி, மாவட்ட தலைவர் நடராஜன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.