21 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சசிகலாவின் புதிய கட்சிக்கு தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு

சசிகலாவின் புதிய கட்சிக்கு தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு

எழுதியவர்: mohan February 21, 2026, 3:43 pm

வருகின்ற 24 2 2026 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் கமுதி அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்ற வருகை தரும் திருமதி சசிகலா புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது திருமதி சசிகலா தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் வேல்முருகன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தமிழக அரசியல் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில் வி. கே. சசிகலா புதிய கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகி வரும் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கிய அரசியல் நகர்வை ஒட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் வேல்முருகன் சசிகலாவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தனது முதல் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார் தமிழகத்தின் வாழ்வாதாரமான விவசாயிகளின் பிரதிநிதியாக விளங்கும் வேல்முருகன் இந்த சந்திப்பின்போது சசிகலா அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து ஆதரவை உறுதிப்படுத்தினார் அப்போது அவர் பேசுகையில் தமிழக மக்களின் பேராதரவுடன் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வரவிருக்கும் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என தெரிவித்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!