72 ஆவது தேசிய சீனியர் ஆண்களுக்கான கபடி போட்டி குஜராத் மாநிலம் வடோதரா நகரில் 24 முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளன.இதற்காக அனைத்து மாநிலங்களிலும் கபடி வீரர்கள் தயாராகி வரும் சூழ்நிலையில் தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களும்; தயாhhகி வருகின்றனர்.இதற்கான பயிற்ச்சி முகாம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. பயிற்சி முகாம் கடந்த இரண்டு மாத காலங்களாக உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் செகண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றன.இந்நிலையில் இன்று நிறைவு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழக தலைவர் மற்றும் ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் சோலை எம். ராஜா தலைமை தாங்கினார்.பயிற்ச்சியாளர்கள் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.விழாவில் கபடி வீரர்களுக்கு போட்டியில் வெல்வது குறித்த ஆலோசனையும் ஊக்கமும் வழங்கப்பட்டன.பின் பயிற்சி முகாமை நிறைவு செய்து வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டன.விழா முடிவில் பயிற்சி முகாமை நிறைவு செய்வதற்காக ஐயப்பசாமி அவர்கள் பூஜை செய்து வீரர்களுக்கு தேசிய அளவில் கபடி போட்டியில் வெற்றி பெற்று வர ஆசி வழங்கினார்
உசிலம்பட்டியில் தமிழ்நாடு சீனியர் ஆண்கள் கபடி அணிக்கான பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது
எழுதியவர்: mohan February 20, 2026, 4:03 pm




You must be logged in to post a comment.