சோழவந்தான் அருகே திருவேடகத்தில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க கூட்டம் மற்றும்கவன ஈர்ப்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, மதுரை மாவட்டம் சோழவந்தன் அருகே திருவேடகத்தில் பாஜக சார்பில் நாளை நமதே தமிழ்நாடு நமதே என்ற வகையில் திமுக ஆட்சியை கண்டித்தும் மத்திய அரசின் பட்ஜெட்டை விளக்கும் வகையிலும் தெருமுனைப் பிரச்சாரமும் நடைபெற்றது பாரதிய ஜனதா கட்சியின் சோழவந்தான் மண்டல் சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர் பாஸ்கரன் தலைமையில் கிளை தலைவர் தசரதன் வரவேற்றார் சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் துவக்கி வைத்து பேசும்போது தமிழ்நாட்டின் ஆளுமையற்ற திமுக ஆட்சி எப்படி கொள்ளையடிக்கின்றார்களோ அதே போல் தான் திருவேடகம் ஊராட்சியிலும் மத்திய அரசிலிருந்து பெறப்பட்ட நிதியில் திருவேடகம் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தராமல் ஏமாற்றும் அவல நிலை உள்ளது கண்டிக்கத்தக்கதாகும் என்று பேசினார் இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பழனிவேல்சாமி மற்றும் இணை அமைப்பாளர் மதுரை கிழக்கு மாவட்ட பொருளாளர் தங்கவேல்சாமி சமயநல்லூர் மண்டல் தலைவர் கணேசன் , மதுரை கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் முருகேஸ்வரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் செல்வி சோழவந்தான் மண்டல் பொதுச் செயலாளர் ரமேஷ் துணைத் தலைவர்கள் ராம் பிரசாத் மற்றும் கருப்பசாமி மண்டல செயலாளர் மாரிமுத்து மண்டல் பிரச்சார பிரிவு தலைவர் காசிராஜன் மகளிர் அணி மண்டல் தலைவர் முருகேஸ்வரி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் செல்வகுமார் சமயநல்லூர் இளைஞர் அணி தலைவர் நாகேந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் உதயகுமார் காதக்கிணறு மண்டல் செயலாளர் கண்ணன் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் ராமதாஸ் செம்பு குடிப்பட்டி கிளை தலைவர் காமாட்சி லோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
திருவேடகத்தில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க கூட்டம் மற்றும்கவன ஈர்ப்பு தெருமுனை பிரச்சாரம்
எழுதியவர்: mohan February 20, 2026, 3:57 pm




You must be logged in to post a comment.