தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுற்றது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி 2026-2027 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன் தொடங்கிய இக்கூட்டத்தொடர், இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் இறுதி நாளை எட்டியது. கடந்த இரண்டு நாட்களாக (பிப்ரவரி 18 மற்றும் 19) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்களின் முடிவில், இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவான பதிலுரை வழங்கினர். இன்றைய கூட்டத்தில் முக்கிய நிகழ்வாக, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அமைச்சர்களின் பதிலுரையைப் புறக்கணித்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் இன்றைய அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியிலும் (பா.ம.க.) பிளவுபட்ட நிலை காணப்பட்டது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான ஜி.கே. மணி மற்றும் அருள் ஆகியோர் கூட்டத்தொடரில் பங்கேற்ற நிலையில், அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை: அ.தி.மு.க கூட்டணி புறக்கணிப்பு..
எழுதியவர்: Askar February 20, 2026, 11:34 am




You must be logged in to post a comment.