18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் குதூகலத்துடன் பெருநாள் தொழுகை நடைபெற்றது..

கீழக்கரையில் குதூகலத்துடன் பெருநாள் தொழுகை நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் June 16, 2018, 3:21 pm

புனித மாதம் ரமலானில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈகைத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

கீழக்கரையில் பாரம்பரியமான தொழுகைப் பள்ளியான ஜும்மா பள்ளி, தெற்குத் தெரு மற்றும் அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் தொழுகை நடைபெற்றது. அதே போல் நபி வழித் தொழுகை தவ்ஹீத் ஜமாத், மக்தூமியா பள்ளி வளாகம், வடக்குத் தெரு சமூக நல அமைப்பு, கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை, இந்தியன் தவ்ஹீத் ஜமாத் போன்ற சமூக அமைப்புகளால் பல இடங்களில் நடத்தப்பட்டது.

பெருநாள் தொழுகை நிறைவில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் ஆரத் தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்த சிறப்புத் தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!