19 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிலக்கோட்டையில் நால்ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்! உடனடி தீர்வு கோரி பொதுமக்கள் வேண்டுகோள்..

நிலக்கோட்டையில் நால்ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்! உடனடி தீர்வு கோரி பொதுமக்கள் வேண்டுகோள்..

எழுதியவர்: Askar February 19, 2026, 5:28 am

நிலக்கோட்டையில் நால்ரோடு சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்! உடனடி தீர்வு கோரி பொதுமக்கள் வேண்டுகோள்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரின் முக்கியமான நால்ரோடு சந்திப்பில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. நகரின் மையப்பகுதியாகவும், பல முக்கிய சாலைகள் இணையும் இடமாகவும் உள்ள இந்த சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் ஒரே நேரத்தில் நுழைவதால் நெரிசல் அதிகரிக்கிறது. சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் சரக்கு ஏற்ற இறக்க நடவடிக்கைகளும் போக்குவரத்து சீர்கேடுக்கு காரணமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த இடத்தில் மாற்று சாலை வசதி இல்லாததால் One-Way முறை நடைமுறைப்படுத்த இயலாத சூழல் நிலவுகிறது. எனவே, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும் என வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:

நால்ரோடு சந்திப்பில் நிரந்தர போக்குவரத்து காவலர் நியமனம்!

Peak நேரங்களில் கனரக வாகனங்களுக்கு (Heavy Vehicles) தற்காலிக நுழைவு தடைவிதிப்பு!

சந்திப்பைச் சுற்றிய 100 மீட்டர் பகுதியில் “No Parking Zone” அறிவிப்பு!

நடுவில் சிறிய சுற்றுச்சாலை (Mini Roundabout) அமைத்து வாகன ஓட்டத்தை ஒழுங்குபடுத்தல்!

தற்காலிக/தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைத்தல்!

மேலும், சாலை விரிவாக்கம் மற்றும் நீரோட்ட வாய்க்கால் மேல் மூடுபலகை அமைத்து அகலத்தை அதிகரிக்கும் திட்டத்தையும் பேரூராட்சி பரிசீலிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக அவசர மருத்துவ சேவைகள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!