18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிலக்கோட்டையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் 42 பவுன் தங்க நகை கொள்ளை. 34 மணி நேரத்தில் கொள்ளையன் கைது! காவல்துறை அதிரடி நடவடிக்கை.

நிலக்கோட்டையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் 42 பவுன் தங்க நகை கொள்ளை. 34 மணி நேரத்தில் கொள்ளையன் கைது! காவல்துறை அதிரடி நடவடிக்கை.

எழுதியவர்: Askar February 18, 2026, 9:50 pm
நிலக்கோட்டையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் 42 பவுன் தங்க நகை கொள்ளை. 34 மணி நேரத்தில் கொள்ளையன் கைது! காவல்துறை அதிரடி நடவடிக்கை.
நிலக்கோட்டையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் 42 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 34 மணி நேரத்தில் கொள்ளையன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பேட்டி.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி.காலனி  நாகம்மாள்  கோவில் தெருவில்  வசிப்பவர் முருகேசன் (42)  இவர் சிவஞானபுரம் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை முருகேசன் என்பவர் பணிக்கு சென்று விட்டார்.  இவரது மனைவி வள்ளிமயில் (38) வீட்டை         பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தார்.
மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடு போயிருந்தன. பட்டப்பகலில்  நடைபெற்ற சம்பவம் குறித்து, வள்ளிமயில் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் சத்யபிரபா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். மேலும்,  கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் சோதனை நடந்தது. இச்சம்பவம் குறித்து,  நிலக்கோட்டை தனிப்படை காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவை  கொண்டு, தீவிரமாக  விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்,  வத்தலகுண்டு அருகே, நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற  வாகன சோதனையின் போது,  சந்தேகத்தின் பேரில் சென்ற நபரை விசாரித்த போது, அவர்  முன்னுக்கு பின் முரணாக பேசியதால்,  அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ராஜபாளையத்தை சேர்ந்த மணிசங்கர் (24) என தெரிய வந்தது. மேலும் அவரிடம் காவல்துறையினர் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் என்பவர் வீட்டில் பட்டப்பகலில் நகை கொள்ளையில் ஈடுபட்டதாக  தெரிவித்தார்.  மணிசங்கர்  பெரியகுளத்தில் தனது தாயுடன் குடியிருந்து வருவதாகவும். கடன் சுமையால் 42 பவுன் நகை  திருடியதாகவும் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட நகை கொள்ளையன் மணிசங்கரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தணிப்படை காவல்துறையினர் தீவிர முயற்சியால்  சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும்  வாகன சோதையின் போது,  சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டு நகை கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 42 பவுன் தங்க நகையை 34 மணி நேரத்தில்  பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும்,  கொள்ளை சம்பவம் நடைபெற்ற  பகுதியில் உள்ள மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் தெரிவித்தார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!