தமிழ்நாடு முதலமைச்சரால் தென்காசி நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட தாமிரபரணி குடிநீர் திட்டம் அலகு-2 பணியானது ரூபாய் ₹69.45 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திட்டத்திற்கு தேவையான சுமார் ₹20 லட்சம் ரூபாய் மதிப்பில் திரவிய நகர் கிராமத்தில் நகர் மன்ற தலைவர் மற்றும் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் வாங்கிய இடத்தினை இன்று நகராட்சி ஆணையாளரிடம் நகர்மன்றத் தலைவர் சாதிர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இதில், நகராட்சி ஆணையாளர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் துணை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தென்காசி நகராட்சியில் இந்த திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர், நகர்மன்ற தலைவர் ஆகியோர்களை பாராட்டி பேசினார்கள். மேலும் தாமிரபரணி குடிநீர் திட்டம் அலகு 2-ற்கு தேவையான மற்றொரு இடத்தை சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகர்மன்ற தலைவரின் தாயாரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான ரபீக்காள் பீவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.