18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடிப்பட்டியில்வாஸன் கண் மருத்துவமனையின் நலம் நாடுவோர் நிகழ்ச்சி

வாடிப்பட்டியில்வாஸன் கண் மருத்துவமனையின் நலம் நாடுவோர் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan February 18, 2026, 5:30 pm

வாடிப்பட்டியில் வாஸன் கண் மருத்துவமனையின் நலம் நாடுவோர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வாடிப்பட்டியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாஸன் கண் மருத்துவமனையின் சார்பாக நலம் நாடுவோர் நிகழ்ச்சி நடைபெற்றது வாடிப்பட்டியின் முகங்களாக அறியப்படும் முக்கியஸ்தர்களை அழைத்து கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி . கமல் பாபு ., தலைமையேற்று உரையாற்றினார். வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் பிரேம்குமார் ., கோபால் அர்ச்சனா ,. சௌந்தர்யா ராகினி ஆகியோர்முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி கிருஷ்ணா மஹால் நிறுவனர் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்வில் பேசிய வாஸன் கண் மருத்துவமனை தலைமை இயக்கு அதிகாரி டாக்டர் கமல் பாபு வாஸன் கண் மருத்துவமனையின் சிறப்பான சேவைகள் பற்றியும் அதிநவீன அறுவை அறுவை சிகிச்சை அரங்குகள் பற்றியும் கண் பாதுகாப்பு பற்றியும் பேசி விழிப்புணர்வு உரையாற்றினார். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிப்பட்டியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!