மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, சேந்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மலர்விழி முன்னிலையில் மாணவர்களை வாழ்த்துவோம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை ஸ்டார் குரு சேரிடபிள் பவுண்டேஷன் நிறுவனர் குருசாமி மற்றும் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் கலந்து கொண்டு பேசும்பொழுது மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்விக் கற்க வேண்டும், மேலும் மாணவர்களுக்கு சமூக சேவை செய்யும் பண்பை பள்ளியில் இருந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஸ்டார் குரு சேரிடபிள் பவுண்டேஷன் இப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்திப் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த வருடம் முழு ஆண்டுத் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களையும் வாழ்த்தி நோட்டு, பேனா, பென்சில், ரப்பர், ஷார்ப்னர், ஸ்கேல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் போனார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
மாணவர்களை வாழ்த்துவோம், சிறப்பு நிகழ்ச்சி
எழுதியவர்: mohan February 18, 2026, 4:17 pm




You must be logged in to post a comment.