18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் (MSEC ALUMNI – SAUDI ARABIA) ஒன்றுகூடல் நிகழ்ச்சி..

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் (MSEC ALUMNI – SAUDI ARABIA) ஒன்றுகூடல் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2026, 1:47 am

முன்னாள் மாணவர்கள் (MSEC ALUMNI – SAUDI ARABIA) ஒன்றுகூடல் நிகழ்ச்சி முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த 13 பிப்ரவரி 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.பல ஆண்டுகளாகப் பல்வேறு காலகட்டங்களில் கல்லூரியில் பயின்ற பட்டதாரிகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்த இந்த நிகழ்வில், சுமார் 80-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கல்லூரியில் தொடங்கிய நட்பு மற்றும் சகோதரத்துவம் தொடரவும், சவூதி அரேபியாவில் முன்னாள் மாணவர்களின் தற்போது செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த ஒன்றுகூடல் அமைந்தது என்றால் அது மிகை அல்ல.கல்லூரியின் மூத்த முன்னோடிகளான முகமது பஷீர் (1988), நாகூர் மொய்தீன் (1990), மொய்தீன் அப்துல் காதர் (1991) மற்றும் சம்சுதீன் (1991) ஆகியோருக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களின் அனுபவம், வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் பயணம் முன்னாள் மாணவர் சமூகத்திற்கு வலிமையான தூண்களாக திகழ்கின்றன என பாராட்டப்பட்டது.நிகழ்ச்சிகள் மற்றும் நினைவுப்பகிர்வுகள்:பழைய நினைவுகளைத் தூண்டும் புகைப்படக் காட்சிகள், மேடை நிகழ்ச்சிகள், நினைவுப்பகிர்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்து, கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளை அனைவரும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் – சவூதி அரேபியா (MSEC ALUMNI – SAUDI ARABIA) உருவாக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிவிப்புஇந்த ஒன்றுகூடலில், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் – சவூதி அரேபியாவிற்கு புதிய நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.தலைவர்: கலிலூர் ரஹ்மான் (2000)துணைத் தலைவர்: முகமது ஜுபைர் அலி (2004)செயலாளர்: ஹரேஷ் ஜெயந்த் (2000)பொருளாளர்: நெல்சன் பாக்கியநாதன் (2001)மேலும், செயற்குழு உறுப்பினர்களாக கமருதீன் (2004), ரிசவ் மைதீன் (2004), அப்துல்லா ஷெரீப் (1999), ஆரிப் அப்துல் சலாம் (2007) மற்றும் ஹமீத் ஃபியாஸ் (2008) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். நன்றியுரை மற்றும் உறுதிமொழி:நிகழ்ச்சி சிறப்பாக அமைய, உழைத்த ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. மேலும், உலகளாவிய அளவில் முன்னாள் மாணவர் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் இயக்குநர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் கூறப்பட்டன.இரவு உணவை வழங்கிய பைசல் (2008) மற்றும் பங்களிப்பு செய்த பிற முன்னாள் மாணவர்களுக்கும் சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.சவூதி அரேபியா முழுவதும் பல்வேறு துறைகளில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.கல்லூரியில் பட்டம் பெற்றவுடன், கல்லூரி தொடர்பு முடிவதில்லை.சமூக பொறுப்பு தொடங்குகிறது. நட்பு தொடர்கிறது… பட்டமளிப்பு நாளில் தொடங்கிய உறவு, முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமாக மலர்ந்து, தான் பயின்ற கல்லூரிக்கு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஏதாவது வகையில் உதவ வேண்டும் என்ற நன்றியுணர்வு உறுதிமொழியுடன் முன்னாள் மாணவர்களின் இந்த சந்திப்பு இனிதே நிறைவடைந்தது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!