தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சுக்களை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் படி நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா, தமிழக முதலமைச்சரை ஒருமையில் பேசியதும், மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களை “சிறுக்கி” என குறிப்பிட்டதும் தென்காசி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சுக்களை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 125 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பாக, தமிழக முதல்வரை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா தமிழக முதலமைச்சரை ஒருமையிலும், மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிரை சிறுக்கி என்றும் பேசியிருந்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணமுரளி @ குட்டியப்பாவின் சர்ச்சை பேச்சுக்களை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கலை கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கனிமொழி, கென்னடி பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், அழகுசுந்தரம், ரவிசங்கர் நகர செயலாளர்கள் சாதிர், வெங்கடேசன், மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, மகளிர் அணி நிர்வாகிகள் ஷோபனா ராணி, தமிழ்ச் செல்வி, பேபி ரஜப் பாத்திமா, சார்பு அணி நிர்வாகிகள் முத்துக்குமார், இசக்கி பாண்டியன், தங்க பாண்டியன், ராமராஜ், வழக்கறிஞர் ரஹ்மான் சாதத், துணை சேர்மன் சுப்பையா, உள்ளிட்ட தென்காசி தெற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் கடையநல்லூர் பகுதியில் குட்டியப்பா எம்எல்ஏ-வை கண்டித்து தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிக் கூண்டு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல் காதர், வடகரை பேரூராட்சி மன்றத் தலைவர் சேக்தாவூது, செங்கோட்டை எஸ்.எம்.. ரஹீம் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றியச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் நகர திமுக செயலாளர் அப்பாஸ் வரவேற்றார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், இலத்தூர் ஆறுமுகச்சாமி, பண்பொழி பேரூராட்சி தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் சிட்டி திவான் மைதீன், முருகன் ராமகிருஷ்ணன், மாலதி, தனலட்சுமி மாவட்டக் கவுன்சிலர் பூங்கொடி, ரஜப் பாத்திமா, மாநில பேச்சாளர் சேலம் சுஜாதா, ஒன்றிய குழு தலைவர் சுப்பம்மாள், மகளிரணி தலைட்சுமி, மணிமேகலை, அன்னலட்சுமி, சமூக வலைதள பொறுப்பாளர் பண்பொழி நிஷா உட்பட SDPI யாசர்கான், மதிமுக முருகன், காங்கிரஸ் ரவி, முஸ்லீம் லீக் செய்யது மசூது மற்றும் 500 க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு கடையநல்லூர் எம்எல்ஏ-வை கண்டித்து கோஷமிட்டனர். இறுதியில் நல்லையா நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.